என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய ரயில்வே
நீங்கள் தேடியது "இந்திய ரயில்வே"
ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளம் பயன்படுத்துவோருக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்பாட் உடனுக்குடன் பதில் சொல்லும். #irctc #chatbot
ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்லைன் சேவை ஆரம்பத்தில் இருந்ததை விட தற்சமயம் அதிகளவு மேம்பட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் ஆன்லைன் சேவை பலமுறை மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு புது வசதிகள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
சமீபத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளம் மேம்படுத்தப்பட்டு புது இன்டர்ஃபேஸ் மற்றும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டன. புது இன்டர்ஃபேஸ் மற்றும் அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. சேவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்க்திஷா (AskDisha) என அழைக்கப்படும் இந்த சேவை ஐ.ஆர்.சி.டி.சி.யின் வாடிக்கையாளர் சேவை மைய உதவியாள் போன்று செயல்படும். ஆஸ்க்திஷா மூலம் பயனர்கள் எந்நேரமும் தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு அதற்கு உடனடியாக பதில் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுவாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் வாடிக்கையாளர் சேவை மையம் பற்றி அதிகளவு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், இந்த சாட்பாட் ஐ.ஆர்.சி.டி.சி. வாடிக்கையாளர் சேவை மைய அனுபவத்தை மேம்படுத்தும். வாடிக்கைாயளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏ.ஐ. சாட்பாட் உடனடியாக பதில் அளிக்கிறது.
தற்சமயம் குறுந்தகவல் வகையில் பதில் அளிக்கும் ஆஸ்க்திஷா சாட்பாட் விரைவில் குரல் வடிவில் பதில் அளிக்கும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்து இருக்கிறது. ஆஸ்க்திஷா குரல் வடிவம் ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரோவர் எனும் நிறுவனம் மூலம் இயங்கும் சாட்பாட், முடிந்த வரை பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. இத்துடன் பயனர்கள் பொதுவாக கேட்க நினைத்து டைப் செய்ய துவங்கும் கேள்விகளை சரியாக பரிந்துரை செய்யும். பயனர்கள் வித்தியாசமான கேள்வியை கேட்கும் போது வாடிக்கையாளர் சேவை மைய மின்னஞ்சல் அல்லது தொடர்பு எண் வழங்கும்.
ஐ.ஆர்.சி.டி.சி.யின் ஆஸ்க்திஷா சாட்பாட் சேவையை பயன்படுத்துவோர், தங்களின் சேவை அனுபவத்தை எமோஜி வடிவில் மதிப்பீடு செய்யவும் முடியும். #irctc #chatbot
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X